மராட்டியத்தில் புதிதாக 7 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் புதிதாக 7 ஆயிரத்து 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வந்தது. தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்தே இருந்தது. இதில் பாதிப்பு எண்ணிக்கை அதிரடியாக கவிழ்ந்தது.
அதன்படி மாநிலத்தில் புதிதாக 7 ஆயிரத்து 89 பேர் மட்டுமே வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைவிட குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு போல பலி எண்ணிக்கையும் பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. மாநிலத்தில் புதிதாக 165 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 40 ஆயிரத்து 514 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.
மும்பை
மராட்டியத்தில் இதுவரை 76 லட்சத்து 97 ஆயிரத்து 906 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 15 லட்சத்து 35 ஆயிரத்து 315 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 12 லட்சத்து 81 ஆயிரத்து 896 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 12 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பையில் நேற்று 1, 620 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நகரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 66 ஆக அதிகரித்து உள்ளது. தாராவியில் புதிதாக 5 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு இங்கும் பாதிப்பு எண்ணிக்கை அதிரடியாக குறைந்து இருக்கிறது.

Related Tags :
Next Story