ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் சாலை மறியல் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 700 பேர் கைது


ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் சாலை மறியல் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 700 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2020 5:07 AM IST (Updated: 13 Oct 2020 5:07 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 700 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் சட்ட தொகுப்பு முறையை ரத்து செய்ய வேண்டும். ரெயில்வே, பாதுகாப்பு துறை உள்ளிட்ட நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஈரோடு பஸ் நிலையம் அருகே சத்தி ரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்துவதற்காக நேற்று காலை ஒன்று கூடினார்கள். இந்த போராட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை தாங்கினார்.

பேர் கைது

கட்சி நிர்வாகிகள் வேளாண் சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தியும், ரெயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் சக்தி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 30 பேரை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். பின்னர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதேபோல் கோபியில் 19 பேரும், பவானியில் 100 பேரும், அந்தியூரில் 22 பேரும், பெருந்துறையில் 13 பேரும், சத்தியமங்கலத்தில் 350 பேரும், பர்கூரில் 100 பேரும், பங்களாப்புதூரில் 27 பேரும், சிவகிரியில் 13 பேரும், வெள்ளோட்டில் 9 பேரும், சென்னிமலையில் 17 பேரும் என மொத்தம் சாலை மறியலில் ஈடுபட்ட பேர் 700 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story