புயல் எச்சரிக்கை எதிரொலி தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை


புயல் எச்சரிக்கை எதிரொலி தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 13 Oct 2020 7:02 PM GMT (Updated: 13 Oct 2020 7:02 PM GMT)

தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை எதிரொலியாக விசைப்படகுகள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி,

மன்னார்வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடலுக்கு செல்லவில்லை

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும் மன்னார்வளைகுடா பகுதியில் சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லாமல், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

Next Story