சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன் முனிரத்னா பேட்டி
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு தலை வணங்குவதாக முனிரத்னா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முனிரத்னா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது இந்த வெற்றியை எதிர்த்து துளசி முனிராஜ்கவுடா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து முனிரத்னா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எனக்கு எதிராக துளசிமுனிராஜ்கவுடா தாக்கல் செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. போலி வாக்காளர்கள் மூலம் நான் வெற்றி பெற்றதாக தவறான தகவலை கூறினார். இதனால் நான் மனம் வருந்தினேன். தேர்தல் முடிந்த பிறகு, தேர்தல் ஆணையம் ஒரு வாக்கு கூட போலியானது இல்லை என்று தெளிவுபடுத்தியது. ஆயினும் எனக்கு எதிரான தவறான பிரசாரம் நிற்கவில்லை. இப்போது நியாயத்திற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை நான் தலை வணங்கி வரவேற்கிறேன்.
விரோதம் வேண்டாம்
எங்கள் 2 பேருக்குள் தனிப்பட்ட விரோதம் வேண்டாம். நான், துளசிமுனிராஜ்கவுடாவுடன் சேர்ந்து பா.ஜனதா கட்சியை பலப்படுத்தும் பணியை செய்ய தயாராக இருக்கிறேன். தேர்தல் என்று வந்த பிறகு குற்றம் சுமத்துவது, குறை சொல்வது, வழக்கு தொடுப்பது என்பது வழக்கமாக இருப்பது தான். ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி மக்கள் என் பக்கம் உள்ளனர். இதற்கு முன்பு அந்த தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ளேன். இந்த தொகுதியில் இன்னும் பல பணிகள் நிலுவையில் உள்ளன. அதை செய்து முடிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு முனிரத்னா கூறினார்.

Related Tags :
Next Story