மேற்கு தொடர்ச்சி மலையில் மழை: பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு
பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அங்கிருந்து உற்பத்தியாகும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பணகுடி,
பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அங்கிருந்து உற்பத்தியாகும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மியாப்புதுக்குளம், நகரைகுளம், பரிவிரிசூரியன் குளம், வீரபாண்டியன்குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குத்திர பாஞ்சான் அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. குத்திர பாஞ்சான் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் பொதுமக்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். முள்புதர்களை அகற்றி குத்திரபாஞ்சான் அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story