தூத்துக்குடியில் ஏசு சபையினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் ஏசு சபையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2020 10:12 PM IST (Updated: 14 Oct 2020 10:12 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஏசு சபை சார்பில் சவேரியானா இல்லத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஏசு சபை சார்பில் சவேரியானா இல்லத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சவேரியானா அதிபர் இஞ்ஞாசி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சைமன்ராஜ், தூய மரியன்னை கல்லூரி முதல்வர் கென்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் யூஜின் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மலைவாழ் மக்களின் உரிமைக்காக உழைத்த ஏசு சபை பாதிரியார் ஸ்டேன் சுவாமியை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து உள்ளனர். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அருட்பணியாளர்கள் சுந்தரி மைந்தன், பிரான்சிஸ் சேல்ஸ் மற்றும் ஹெர்மென் கில்டு, ஆசிரியர் ஜோ ஆண்டனி, நெய்தல் அண்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story