அமைச்சரவை கூட்டம்: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை


அமைச்சரவை கூட்டம்: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 15 Oct 2020 4:03 AM IST (Updated: 15 Oct 2020 4:03 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டசபையில் 4-வது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடந்தது.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டசபையில் 4-வது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் மற்றும் தலைமை செயலர் அஸ்வனிகுமார், மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, சுற்றுலா திட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் அமைச்சர்கள் ஜோசப் மரியதாஸ், ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலன், எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன், அண்ணாமலை ரெட்டியார் ஆகியோரின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story