உப்பனாறு- காமராஜர் சாலை இணைப்பு பாலம் பணி மத்திய குழு ஆய்வு


உப்பனாறு- காமராஜர் சாலை இணைப்பு பாலம் பணி மத்திய குழு ஆய்வு
x
தினத்தந்தி 15 Oct 2020 4:11 AM IST (Updated: 15 Oct 2020 4:11 AM IST)
t-max-icont-min-icon

உப்பனாறு - காமராஜர் சாலை இணைப்பு பாலம் பணியை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி நகரில் பிரதான சாலையான அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக காமராஜர் சாலை மற்றும் மறைமலையடிகள் சாலையை இணைக்கும் வகையில் உப்பனாறு கழிவுநீர் வாய்க்கால் மீது பாலம் கட்டும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் காமராஜர் சாலையில் உள்ள பழைய பாலத்தையும், உப்பனாறு பாலத்தையும் இணைக்கும் பணி விரைவில் தொடங்கஉள்ளது.

மத்திய குழு ஆய்வு

இந்த நிலையில் காமராஜர் சாலையில் உள்ள பாலத்தின் உறுதி தன்மையை ஆராய சென்னை மத்திய கட்டிட ஆராய்ச்சி மைய முதன்மை ஆராய்ச்சியாளர் சீனிவாஸ் வோகு, சப்தர்ஷி சஸ்மல் தலைமையில் தொழில்நுட்ப வல்லுனர் குழுவினர் நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர்.

காமராஜர் சாலையில் உள்ள பழைய பாலம் உறுதியுடன் இருப்பதாக மத்திய குழு தெரிவித்தது. இதுபற்றி விரிவான தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றனர். மேலும் காமராஜர் சாலையில் உள்ள பாலத்தை கூடுதலாக நவீன முறையில் பலப்படுத்துவதற்கு ஆலோசனைகளை மத்திய குழு தெரிவித்தது.

இந்த ஆய்வின்போது புதுச்சேரி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏழுமலை (மத்திய கோட்டம் சாலை மற்றும் கட்டிடம்), உதவி பொறியாளர் சம்பந்தம், இளநிலை பொறியாளர்கள் தேவதாஸ், வேல்முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story