பூர்வீக வீடு இடிக்கப்பட்டதால் விரக்தி: மாற்றுத்திறனாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் அருகே பூர்வீக வீட்டை சிலர் இடித்ததால், விரக்தியில் மாற்றுத்திறனாளி தனது குடும்பத்தினருடன் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேற்று மதியம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி உள்பட சிலர் வந்தனர். பின்னர் அவர்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேன் மற்றும் பாட்டிலை வெளியே எடுத்தனர். இதையடுத்து அந்த மாற்றுத்திறனாளி மற்றும் 4 பெண்கள் என 5 பேர் திடீரென தங்களுடைய உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அதை பார்த்த அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று அவர்களை தடுத்து மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தீக்குளிக்க முயன்றவர்கள், திண்டுக்கல் அருகேயுள்ள யாகப்பன்பட்டியை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி வைலட்ராஜா (வயது 50), அவருடைய தாயார் விசுவாசம்மாள் (78), உறவினர்கள் மங்களமேரி (56), ரஞ்சிதம் (60), மரியஞானம்மாள் (56) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் கூறுகையில், எங்களுடைய பூர்வீக வீடு யாகப்பன்பட்டியில் உள்ளது. அந்த வீட்டுக்கு பட்டா கேட்டு நாங்கள் விண்ணப்பித்து இருக்கிறோம். இதுவரை எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகேயுள்ள முட்புதர்களை அகற்றினோம். அப்போது திடீரென அங்கு வந்த சிலர் எங்களை கடுமையாக தாக்கினர். மேலும் எங்களை மிரட்டி வீட்டை அபகரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். இதுமட்டுமின்றி எங்களுடைய பூர்வீக வீட்டையும் இடித்து விட்டனர். எனவே, அதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். மாற்றுத்திறனாளி தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story