மாவட்ட செய்திகள்

‘இந்தி திரைப்பட தொழிலின் இடமாற்ற முயற்சியை சகித்து கொள்ள மாட்டோம்’ முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு + "||" + 'We will not tolerate any attempt to relocate the Hindi film industry' - Prime Minister Uttam Thackeray

‘இந்தி திரைப்பட தொழிலின் இடமாற்ற முயற்சியை சகித்து கொள்ள மாட்டோம்’ முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு

‘இந்தி திரைப்பட தொழிலின் இடமாற்ற முயற்சியை சகித்து கொள்ள மாட்டோம்’ முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
இந்தி திரைப்பட தொழிலை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியை சகித்து கொள்ள மாட்டோம் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.
மும்பை,

கொரோனா ஊரடங்கின் தளர்வாக சினிமா தியேட்டர்களை நேற்று முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் இந்தி திரைப்பட தலைநகரமாக விளங்கும் மும்பையை உள்ளடக்கிய மராட்டியத்தில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.


இந்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் அரங்குகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தியேட்டர்கள் திறப்பின் போது மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடைமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனையின் போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

சகித்து கொள்ள மாட்டோம்

மும்பை நாட்டின் நிதி தலைநகரம் மட்டும் அல்ல. பொழுதுபோக்கு தொழிலின் தலைநகரமாகவும் விளங்குகிறது. பாலிவுட் திரைப்படங்கள் உலகம் முழுவதும் அனுபவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சமீப காலமாக இந்தி திரைப்படத்தின் நற்பெயரை கெடுத்து அதன் கதையை முடிக்கவும், இந்தி திரைப்பட தொழிலை வேறு இடத்துக்கு மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது வேதனையை தருகிறது. இந்த முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டோம்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

உத்தரபிரதேசத்தில் திரைப்பட நகரம்

மும்பையில் பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு விசாரணை முகமைகள் கொண்டு விசாரித்து வருவதையும், சினிமா தயாரிப்பாளர்களை ஈர்க்க உத்தரபிரதேசத்தில் பிரமாண்ட திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று அந்த மாநில பா.ஜனதா அரசு சமீபத்தில் அறிவித்ததையும் மனதில் கொண்டு உத்தவ் தாக்கரே இவ்வாறு பேசியுள்ளார்.

இதற்கிடையே மராட்டியத்தில் சினிமா தியேட்டர்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும், பொழுதுபோக்கு தொழில் மாநில பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதால் தியேட்டர்களை திறக்க அரசு சாதகமான முறையில் செயல்படும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் எதிர்கால வாழ்க்கைக்கு நிச்சயம் உதவும் கலெக்டர் சாந்தா பேச்சு
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் எதிர்கால வாழ்க்கைக்கு நிச்சயம் உதவும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.
2. தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது வட்டார கல்வி அலுவலர் பேச்சு
தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று வட்டார கல்வி அலுவலர் சம்பத் தெரிவித்தார்.
3. மராட்டியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
4. சிபிஐக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை திரும்ப பெற்றது மராட்டிய அரசு
மராட்டிய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் இனி விசாரணை நடத்த வேண்டும் என்றால், மாநில அரசிடம் சிபிஐ முன் அனுமதி பெற வேண்டும்
5. தேசியவாத காங்கிரசில் சேரும் ஏக்நாத் கட்சே: அஸ்திவார கற்கள் வெளியேறுவது குறித்து பா.ஜனதா சிந்திக்க வேண்டும்
அஸ்திவார கற்கள் வெளியேறுவது குறித்து பா.ஜனதா சிந்திக்க வேண்டும் என்று ஏக்நாத் கட்சே அக்கட்சியில் இருந்து விலகியது பற்றி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை