வன்கொடுமைக்கு எதிராக கண்களை கட்டி 6 வயது சிறுவன் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்


வன்கொடுமைக்கு எதிராக கண்களை கட்டி 6 வயது சிறுவன் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
x
தினத்தந்தி 16 Oct 2020 4:10 AM IST (Updated: 16 Oct 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமைகளை கண்டித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வில்லியனூர் பகுதியை சேர்ந்த 6 வயது மாணவர் சாய் பிரணவ் 2 கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு சுமார் 1 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டினார்.

புதுச்சேரி,

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 89-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்கொடுமைகளை கண்டித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வில்லியனூர் பகுதியை சேர்ந்த 6 வயது மாணவர் சாய் பிரணவ் 2 கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு சுமார் 1 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டினார்.

பாரதி பூங்கா சாலையில் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடந்தது. இதை முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பெத்திசெமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு மாணவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Next Story