வருமான வரித்துறை ஊழியர்கள் போராட்டம்


வருமான வரித்துறை ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2020 4:18 AM IST (Updated: 16 Oct 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

புதுவை வருமான வரித்துறை ஊழியர்கள் சங்கம், அதிகாரிகள் சங்கம் இணைந்து நேற்று உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பவேண்டும், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், உதவி ஆணையர் பதவியை 2015-ல் இருந்து நிரந்தரமாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வருமான வரித்துறை ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

புதுவை வருமான வரித்துறை ஊழியர்கள் சங்கம், அதிகாரிகள் சங்கம் இணைந்து நேற்று உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு அதிகாரிகள் சங்க செயலாளர் பாலமுருகன், ஊழியர் சங்க செயலாளர் தேசிகன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வருமான வரித்துறை ஊழியர் சங்க தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட அலுவலகங்களின் மண்டல செயலாளர் கோவிந்தன் சிறப்புரையாற்றினார். ஊழியர் சங்க புதுவை கிளை பொருளாளர் சிற்றரசன் உள்பட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Next Story