நெல்லையில் அண்ணா பல்கலைக்கழகத்தை தி.மு.க.வினர் முற்றுகை
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை,
அண்ணா பல்கலைக்கழகம் 2-ஆக பிரிக்கப்பட்டதை கண்டித்தும், துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக கூறியும், இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையொட்டி நெல்லையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில இளைஞரணி துணைத்தலைவர் துரை தலைமை தாங்கினார். தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story