கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகை ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகை ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2020 5:39 AM IST (Updated: 16 Oct 2020 5:39 AM IST)
t-max-icont-min-icon

ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்குள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரே சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பா.ஜனதாவினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக அறையில் தரையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. நகர தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி, பொருளாளர் வெங்கடேசன் சென்னகேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி கலெக்டர் விஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், தாசில்தார் மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜூ மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பா.ஜனதாவினர் கலைந்து சென்றனர்.

குளிர்பதன கிட்டங்கி

இதேபோன்று எட்டயபுரம் அருகே மேல ஈரால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஊர் தலைவர் பாலமுருகன் தலைமையில், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அதில், ‘மேல ஈரால் பஞ்சாயத்தில் வேளாண்மைத்துறை சார்பில், விளைபொருட்களை சேமித்து வைக்கும் வகையில் குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும். இதற்கு போதிய இடவசதியும் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Next Story