கோவில்பட்டியில் இந்து மகா சபாவினர் ஆர்ப்பாட்டம்
இந்துக்களின் உரிமைகளை தடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி அகில பாரத இந்து மகாசபா சார்பில் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் அருகே நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி,
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் எப்போதும் போல் பக்தர்கள் வருவதற்கு நிபந்தனையின்றி அனுமதி வழங்க கோரியும், இந்துக்களின் உரிமைகளை தடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி அகில பாரத இந்து மகாசபா சார்பில் கோவில்பட்டி தாலுகா அலுவலகம் அருகே நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் கல்கி ராஜசேகர் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் பத்மபிரியா, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாணிக்கராஜா, மாநில செய்தி தொடர்பாளர் நரேன் கல்யாண், நெல்லை மாவட்ட மகளிர் அணி தலைவர் சீனித்தாய், கரூர் மாவட்ட தலைவர் ராஜவேல், குமரி மாவட்ட தலைவர் அருளானந்த் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story