தசரா, தீபாவளி பண்டிகைகளையொட்டி தென்மேற்கு ரெயில்வே சார்பில் 42 சிறப்பு ரெயில்கள் இயக்கம்


தசரா, தீபாவளி பண்டிகைகளையொட்டி தென்மேற்கு ரெயில்வே சார்பில் 42 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 17 Oct 2020 3:22 AM IST (Updated: 17 Oct 2020 3:22 AM IST)
t-max-icont-min-icon

தசரா-தீபாவளி பண்டிகைகளையொட்டி தென்மேற்கு ரெயில்வே சார்பில் 42 சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளையொட்டி தென்மேற்கு ரெயில்வே சார்பில் 42 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

யஷ்வந்தபுரா-கொர்பா சிறப்பு ரெயில் வருகிற 23-ந் தேதி முதல் நவம்பர் 27-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது. கொர்பா-யஷ்வந்தபுரா சிறப்பு ரெயில் 25-ந் தேதியில் இருந்து நவம்பர் 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படும்.

மைசூரு-வாரணாசி சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் நவம்பர் 26-ந் தேதி வரை செவ்வாய், வியாழக்கிழமை மட்டும் இயக்கப்படும். வாரணாசி-மைசூரு ரெயில் வாரணாசியில் வருகிற 22-ந்தேதி முதல் நவம்பர் 28-ந்தேதி வரை வியாழன், சனிக்கிழமைகளில் மட்டும் இயங்குகிறது.

அகமதாபாத்-யஷ்வந்தபுரா சிறப்பு ரெயில் 27-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 1-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமை மட்டும் இயங்கும். யஷ்வந்தபுரா-அகமதாபாத் சிறப்பு ரெயில் 25-ந் தேதி முதல் நவம்பர் 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படும்.

மைசூரு-தார்வார்

காந்திபுரம்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு சிறப்பு ரெயில் வருகிற 27-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 1-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமை மட்டும் இயக்கப்படும். கே.எஸ்.ஆர்.பெங்களூரு-காந்திபுரம் சிறப்பு ரெயில் வருகிற 24-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 28-ந்தேதி வரை சனிக்கிழமை மட்டும் இயங்கும்.

உப்பள்ளி-லோக்மானியதிலக் சிறப்பு ரெயில் வருகிற 22-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை தினமும் இயக்கப்படும். லோக்மானியதிலக்-உப்பள்ளி ரெயில் வருகிற 23-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 1-ந் தேதி வரை தினமும் இயக்கப்படும்.

மைசூரு-தார்வார் சிறப்பு ரெயில் வருகிற 21-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 1-ந் தேதி வரை தினமும் இயக்கப்படும். தார்வார்-மைசூரு ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை தினமும் இயங்கும்.

ஜோத்பூர்-பெங்களூரு

வாஸ்கோ-பாட்னா ரெயில் வருகிற 21-ந் தேதி முதல் நவம்பர் 25-ந் தேதி வரை புதன்கிழமை மட்டும் இயக்கப்படும். பாட்னா-வாஸ்கோ ரெயில் வருகிற 24-ந் தேதி முதல் நவம்பர் 28-ந் தேதி வரை சனிக்கிழமை மட்டும் இயக்கப்படும்.

ஜோத்பூர்-கே.எஸ்.ஆர். பெங்களூரு சிறப்பு ரெயில் வருகிற 24-ந் தேதி முதல் டிசம்பர் 3-ந் தேதி வரை வியாழன், சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும். கே.எஸ்.ஆர்.பெங்களூரு-ஜோத்பூர் சிறப்பு ரெயில் ரெயில் வருகிற 21-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை திங்கட்கிழமை, புதன்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும்.

உப்பள்ளி-வாரணாசி

உப்பள்ளி-செகந்திராபாத் சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை தினமும் இயக்கப்படும். செகந்திராபாத்-உப்பள்ளி சிறப்பு ரெயில் வருகிற 21-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை தினமும் இயக்கப்படும்.

அஜ்மீர்-மைசூரு சிறப்பு ரெயில் வருகிற 23-ந் தேதி முதல் நவம்பர் 27-ந் தேதி வரை ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும். மைசூரு-அஜ்மீர் சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் நவம்பர் 26-ந் தேதி வரை செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும்.

உப்பள்ளி-வாரணாசி சிறப்பு ரெயில் வருகிற 23-ந் தேதி முதல் நவம்பர் 27-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை மட்டும் ஓடும். அதே போல் வாரணாசி-உப்பள்ளி சிறப்பு ரெயில் வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படும்.

பாட்னா-பானசவாடி

விஜயவாடா-உப்பள்ளி சிறப்பு ரெயில் வருகிற வருகிற 21-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை தினமும் ஓடும். உப்பள்ளி-விஜயவாடா சிறப்பு ரெயில் வருகிற 21-ந் தேதி தொடங்கி நவம்பர் 30-ந் தேதி வரை தினமும் ஓடும்.

தர்பங்கா-மைசூரு சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி முதல நவம்பர் 24-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமை மட்டும் இயங்கும். மைசூரு-தர்பங்கா சிறப்பு ரெயில் வருகிற 24-ந் தேதி முதல் நவம்பர் 28-ந் தேதி வரை சனிக்கிழமை மட்டும் இயக்கப்படும்.

படலிபுத்ரா-யஷ்வந்தபுரா சிறப்பு ரெயில் வருகிற 23-ந் தேதி தொடங்கி நவம்பர் 27-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை மட்டும் ஓடும். யஷ்வந்தபுரா-படலிபுத்ரா சிறப்பு ரெயில் வருகிற 26-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை (திங்கட்கிழமை) ஓடும்.

பாட்னா-பானசவாடி சிறப்பு ரெயில் வருகிற 22-ந் தேதி முதல் நவம்பர் 26-ந் தேதி வரை (வியாழக்கிழமை) ஓடும். பானசவாடி-பாட்னா சிறப்பு ரெயில் வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 29-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும்.

காசிகுட்டா-மைசூரு

ஹடியா-யஷ்வந்தபுரா சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி தொடங்கி நவம்பர் 24-ந் தேதி வரை (செவ்வாய்க்கிழமை) இயங்கும். யஷ்வந்தபுரா-ஹடியா சிறப்பு ரெயில் வருகிற 23-ந் தேதி தொடங்கி நவம்பர் 27-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை) ஓடும்.

டடா-யஷ்வந்தபுரா சிறப்பு ரெயில் வருகிற 23-ந் தேதி தொடங்கி நவம்பர் 27-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை) இயக்கப்படும். யஷ்வந்தபுரா-டடா சிறப்பு ரெயில் வருகிற 26-ந் தேதி தொடங்கி நவம்பர் 30-ந் தேதி வரை (திங்கட்கிழமை) இயக்கப்படும்.

காசிகுட்டா-மைசூரு சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி தொடங்கி நவம்பர் 29-ந் தேதி வரை தினமும் இயக்கப்படும். மைசூரு-காசிகுட்டா சிறப்பு ரெயில் வருகிற 21-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை தினமும் இயக்கப்படும்.

லக்னோ-யஷ்வந்தபுரா

புபனேஸ்வர்-பெங்களூரு கன்டோன்ட்மென்ட் சிறப்பு ரெயில் வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 29-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும். பெங்களூரு கன்டோன்ட்மென்ட்-புபனேஸ்வர் சிறப்பு ரெயில் வருகிற 27-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை (செவ்வாய்க்கிழமை) ஓடும்.

யஷ்வந்தபுரா-லக்னோ சிறப்பு ரெயில் வருகிற 26-ந் தேதி தொடங்கி நவம்பர் 30-ந் தேதி வரை (திங்கட்கிழமை) இயக்கப்படும். லக்னோ-யஷ்வந்தபுரா சிறப்பு ரெயில் வருகிற 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி வரை (வியாழக்கிழமை) ஓடும்.

யஷ்வந்தபுரா-கண்ணூர் சிறப்பு ரெயில் வருகிற 20-ந் தேதி தொடங்கி நவம்பர் 30-ந் தேதி வரை தினமும் இயக்கப்படும். அதே போல் கண்ணூர்-யஷ்வந்தபுரா சிறப்பு ரெயில் வருகிற 21-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை தினமும் இயக்கப்படும்.

இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Next Story