மாவட்ட செய்திகள்

குழந்தையை அடிப்பதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை + "||" + The girl committed suicide by drinking poison after her husband condemned her for beating the child

குழந்தையை அடிப்பதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

குழந்தையை அடிப்பதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
குழந்தையை அடிப்பதை கணவர் கண்டித்ததால் விரக்தி அடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் எல்.ஐ.சி. நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் தனபாலன். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கோகிலப்பிரியா (வயது 27). எம்.எஸ்சி. பட்டதாரி. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.


கோகிலப்பிரியா தனது குழந்தையை அடிக்கடி திட்டுவதும், அடிப்பதுமாக இருந்துள்ளார். இதை தனபாலன் பலமுறை கண்டித்து உள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

விஷம் குடித்து தற்கொலை

நேற்றுமுன்தினமும் கோகிலப்பிரியா தனது குழந்தையை அடித்தார். இதை பார்த்த தனபாலன் கோபமடைந்து மனைவியை கடுமையாக திட்டினார். இதனால் மனமுடைந்த கோகிலப்பிரியா, தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டார்.

உடனடியாக அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு கோகிலப்பிரியா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் கோகிலப்பிரியாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் திருமண நாளன்று புதுப்பெண் தற்கொலை கணவர், குடும்பத்தினர் மீது போலீசில் புகார்
பெங்களூருவில் திருமண நாளன்று புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர், அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
2. உத்திரமேரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தற்கொலை
உத்திரமேரூர் அருகே கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை
திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
4. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை
திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
5. ஆறுமுகநேரியில் பரிதாபம் லாரி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
கொரோனா வைரஸ் தாக்கத்தால், லாரி தொழில் முடங்கியதால் மனமுடைந்த லாரி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.