மாவட்ட செய்திகள்

சேலத்தில், வீட்டை எழுதி தருமாறு வளர்ப்பு மகன் கழுத்தில் கத்தியை வைத்து, திருநங்கைக்கு மிரட்டல் கணவருக்கு வலைவீச்சு + "||" + In Salem, to write home Foster son neck Keep the knife Threat to transgender

சேலத்தில், வீட்டை எழுதி தருமாறு வளர்ப்பு மகன் கழுத்தில் கத்தியை வைத்து, திருநங்கைக்கு மிரட்டல் கணவருக்கு வலைவீச்சு

சேலத்தில், வீட்டை எழுதி தருமாறு வளர்ப்பு மகன் கழுத்தில் கத்தியை வைத்து, திருநங்கைக்கு மிரட்டல் கணவருக்கு வலைவீச்சு
சேலத்தில் வீட்டை எழுதி தருமாறு வளர்ப்பு மகனின் கழுத்தில் கத்தியை வைத்து திருநங்கையை மிரட்டிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்,

சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே உள்ள கார்கானா பகுதியை சேர்ந்தவர் திருநங்கை கண்ணகி (வயது 36) . இவர் ராகுல் (13) என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவன் தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் கண்ணகியும், சேலம் லைன்மேட்டை சேர்ந்த அப்சல் முபாரக் (32) என்பவரும் காதலித்தனர். அப்சல் முபாரக் சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.


இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டு அவர்கள் கூத்தாண்டவர் திருவிழாவின் போது திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் கண்ணகிக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்பிலான வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இந்த வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு கண்ணகியை, அப்சல் முபாரக் அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். மேலும் கண்ணகியையும், ராகுலையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அப்சல் முபாரக், சிறுவன் ராகுலை தாக்கியதுடன் அவனுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கண்ணகியிடம் வீட்டை எழுதி தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஆதாரத்துடன் திருநங்கை கண்ணகி தனது கணவர் மீது பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அப்சல் முபாரக் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் பயங்கரம்: பெயிண்டர் கழுத்தை அறுத்து கொலை மனைவியை தவறாக பேசியதால் - நிலபுரோக்கர் ஆத்திரம்
சேலத்தில் மனைவியை தவறாக பேசியதால் பெயிண்டரை கழுத்தை அறுத்து கொலை செய்த நிலபுரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
2. சேலத்தில் உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சாவு இறப்பு சான்றிதழ் வழங்கிய டாக்டர் மீது நடவடிக்கை?
சேலத்தில் உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் உயிருடன் இருக்கும் போதே இறப்பு சான்றிதழ் வழங்கிய டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
3. சேலத்தில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
சேலத்தில் ரேஷன்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
4. சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை படம்பிடிக்கும் கண்காணிப்பு கேமரா
சேலத்தில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை கண்காணிப்பு கேமராக்கள் படம் பிடிக்கின்றன.
5. சேலத்தில் நள்ளிரவில் வீடு தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
சேலத்தில் நள்ளிரவில் வீடு தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.இது குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.