கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
கிருஷ்ணகிரி,
அ.தி.மு.க.தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைந்து, நேற்று 49-வது ஆண்டு தொடக்க விழாயொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கட்சி கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிகொண்டாடினார்கள். அதன்படி கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆருக்காக உருவாக்கப்பட்ட சமாதிக்கு அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் மலர்தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, பெத்ததாளப்பள்ளியில் மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் தலைமையில், மாவட்ட செயலாளர் அசோக்குமார், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதையடுத்து நகர அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் நகர செயலாளர் கேசவன் தலைமையில் நடந்த விழாவில், மாவட்ட செயலாளர் அசோக்குமார் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த மாட்டுஓனியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன் தலைமையில், மாவட்ட செயலாளர் கட்சி கொடியை ஏற்றி வைத்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல் சக்ணாவூரில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து மாவட்ட செயலாளர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் அம்சா ராஜன், மாவட்ட அவை தலைவர் காத்தவராயன், முன்னாள் பால்வள தலைவர் தென்னரசு, முன்னாள் நகராட்சி துணை தலைவர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் எம்.ஜி.ஆர். சிலை அருகே அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் வேடி, தேவேந்திரன், நகர செயலாளர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.
விழாவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருஞானம், ஒன்றிய பொருளாளர் சேட்டுக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் தீபக், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் முருகேசன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கரநாராயணன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆறுமுகம், விஜயகுமார், சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது.
இதேபோல் ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு, மாநகர செயலாளர் நாராயணன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கட்சி கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். விழாவில் மேற்கு மாவட்ட துணை செயலாளர் மதன், கூட்டுறவு சங்க தலைவர் நடராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், சந்திரன், லஜபதி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வாசுதேவன், சிஜு கிருஷ்ணா, தவமணி, நகர பொருளாளர் குமார், அரப் ஜான், சிவலிங்கம், சுரேஷ், பவானி சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வேப்பனப்பள்ளி பகுதியில் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதில் வேப்பனபள்ளி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் மாவட்ட பிரதிநிதி பசவராஜ், ஊராட்சி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கொண்டனர். தொடர்ந்து குந்தாரப்பள்ளி, பலேரிப்பள்ளி, வி.மாதேப்பள்ளி, வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Related Tags :
Next Story