அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா: சேலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை


அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா: சேலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 18 Oct 2020 6:11 AM GMT (Updated: 18 Oct 2020 6:11 AM GMT)

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சேலத்தில் நேற்று எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சேலம்,

அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்கவிழா நேற்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி, சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் அண்ணா பூங்கா பகுதியில் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செம்மலை, மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அண்ணா பூங்கா மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு பட்டாசு வெடித்தும், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், மனோன்மணி, வெற்றிவேல், ராஜா, மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் சரவணன், தியாகராஜன், சண்முகம், யாதவமூர்த்தி, சேலம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வே-பிரிட்ஜ் ராஜேந்திரன், சேலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவரும், மாநகர் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளருமான கே.எஸ்.சதீஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் தொடக்க விழாவையொட்டி சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆத்தூர் கோட்டை பகுதியில் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து கட்சி கொடி ஏற்றப்பட்டு, கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஆத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மோகன், மாவட்ட துணைச் செயலாளர் அர்ஜுனன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளிசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் தென்னரசு, நகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் கலியன், இளங்கோ, முஸ்தபா, ராமலிங்கம், மகளிரணி சுசீலா, சிறுபான்மை பிரிவு ரெமோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story