மோட்டார் சைக்கிளை வழிமறித்து கணவன், மனைவியை தாக்கி கொலை மிரட்டல் 2 பேருக்கு வலைவீச்சு


மோட்டார் சைக்கிளை வழிமறித்து கணவன், மனைவியை தாக்கி கொலை மிரட்டல் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Oct 2020 3:29 AM IST (Updated: 19 Oct 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து கணவன் -மனைவியை தாக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம்,

புதுவை அருகே வீராம்பட்டினம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 40). இவருக்கு வசந்தபிரியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று பாரதிராஜா தனது மனைவியுடன் புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வீராம்பட்டினத்தை சேர்ந்த மகேஷ்வர்மா மற்றும் அவரது நண்பர் பின்தொடர்ந்து வந்து அரியாங்குப்பம் கால்நடை மருத்துவமனை அருகே பாரதிராஜா மோட்டார் சைக்கிளை வழிமறித்து, தகராறு செய்தனர்.

பின்னர் அவரது மோட்டார் சைக்கிள் சாவியை பிடுங்கி, பாரதிராஜாவை தலை, முகம் என்று சரமாரியாக தாக்கினர். இதை தடுக்க முயன்ற வசந்தபிரியாவுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த பாரதிராஜா புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து பாரதிராஜாவின் மனைவி வசந்தபிரியா அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவியை வழிமறித்து தாக்கிய மகேஷ் வர்மா மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story