கடையம் அருகே கூட்டுறவு சங்கத்தில் பூங்கோதை எம்.எல்.ஏ. ஆய்வு


கடையம் அருகே கூட்டுறவு சங்கத்தில் பூங்கோதை எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 19 Oct 2020 4:45 AM IST (Updated: 19 Oct 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் பண மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, பூங்கோதை எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

கடையம்,

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் பண மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, பூங்கோதை எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது கூட்டுறவு சங்க தலைவர் உச்சிமாகாளி, நிர்வாக குழு உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களிடம் பணம் கையாடல் குறித்தும், உறுப்பினர்களுக்கு சேமிப்பு பணத்தை திருப்பி கொடுப்பது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் பூங்கோதை எம்.எல்.ஏ. கூறுகையில், இந்த கூட்டுறவு சங்கத்தில் மிகவும் ஏழை, எளியவர்கள் தாங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை சேமிப்பாக வைத்துள்ளனர். அவர்களில் பலரது கணக்கில் இருந்த பணத்தை மோசடியாக கையாடல் செய்தது மிகவும் கண்டித்தக்கது. இதுகுறித்து நிர்வாக ரீதியாக உரிய விசாரணை செய்து பணத்தை இழந்த அனைவருக்கும் மீண்டும் பணம் கொடுக்க நடவடிக்கை எடுக்க கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் நான் வலியுறுத்துவேன். இதுபோன்று தமிழகத்தின் பல கூட்டுறவு சங்கங்களிலும் நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின் போது, முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் சேர்மசெல்வன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Next Story