பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் விக்கிரமராஜா வலியுறுத்தல்


பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் விக்கிரமராஜா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Oct 2020 10:08 AM IST (Updated: 19 Oct 2020 10:08 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என விக்கிரமராஜா கூறினார்.

சாத்தூர்,

சாத்தூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சாத்தூர் கிளை சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில பொருளாளர் சதக்கத்துல்லா தலைமை தாங்கினார். ராதா கிருஷ்ணா வித்யாலயா பள்ளி தாளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வியாபாரிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரே அணியில் இணைக்கும் முயற்சியில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கினால் அனைத்து சிறு, குறு வியாபாரிகள் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகினர். சிறு, குறு வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளனர்.

அவர்களை மீட்கும் வகையில் சிறு, சிறு அமைப்புகளாக உள்ள அனைத்து வியாபாரிகளையும் தமிழ்நாடு வணிகர் சங்கம் என்ற பேரவையில் இணைக்கும் முயற்சியாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் வியாபாரிகள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வியாபாரிகளின் நலன் குறித்து பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு வியாபாரிகள் வணிகர் சங்கம் பேரவை சார்பாக அரசுக்கு தெரிவிக்க உள்ளேன்.

ஊரடங்கினால் வேலை இழந்த தீப்பெட்டி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை காலத்தில் மாநில அரசு இலவசமாக ரூ. 5,000 வழங்க வேண்டும். அதேபோல மத்திய அரசு வட்டி இல்லாத கடனாக நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story