சுயமரியாதை இருந்தால் ‘பதவியில் தொடரலாமா என கவர்னர் யோசிப்பார்’ சரத்பவார் தாக்கு


சுயமரியாதை இருந்தால் ‘பதவியில் தொடரலாமா என கவர்னர் யோசிப்பார்’ சரத்பவார் தாக்கு
x
தினத்தந்தி 19 Oct 2020 9:19 PM GMT (Updated: 19 Oct 2020 9:19 PM GMT)

சுயமரியாதை இருந்தால் பதவியில் தொடரலாமா என்பது குறித்து கவர்னர் யோசிப்பார் என்று சரத்பவார் கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை திடீரென மதசார்பின்மைக்கு மாறிவிட்டீர்களா என கேட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் பதிலடி கொடுத்தார். இதனால் அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் கவர்னர் மற்றும் முதல்-மந்திரி இடையே மதசார்பின்மை மற்றும் இந்துத்வா கொள்கை விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது.

சுயமரியாதை

இந்தநிலையில் உஸ்மனாபாத் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கவர்னர், முதல்-மந்திரிக்கு எழுதிய சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து கூறியதாவது:-

முதல்-மந்திரிக்கு கவர்னர் எழுதிய கடிதத்தில் உள்ள வார்த்தைகள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா அதிருப்தி தெரிவித்து உள்ளார். சுயமரியாதை உள்ள எவரும் இனிமேல் அந்த பதவியில் தொடரலாமா அல்லது வேண்டாமா என யோசிப்பார்.

இவ்வாறு சரத்பவார் கூறியுள்ளார்.

Next Story