பட்டத்துடன் தட்டு ஏந்தி பட்டதாரி இளைஞர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் புதுவை தலைமை தபால் நிலையம் முன் பட்டதாரி இளைஞர்கள் ஒரு கையில் பட்டம், மற்றொரு கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் காலியாக உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி இடத்தை நிரப்பவேண்டும். கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களுக்கு மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்க வேண்டும். வயது வரம்பில் 2 ஆண்டுகள் தளர்வு, பட்டயப்படிப்பு முடித்த ஆசிரியர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்க இந்த ஆண்டுக்குள் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் புதுவை தலைமை தபால் நிலையம் முன் பட்டதாரி இளைஞர்கள் ஒரு கையில் பட்டம், மற்றொரு கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story