மாவட்ட செய்திகள்

தென்காசி நகரசபை அலுவலகம் முன் பா.ஜனதாவினர் உண்ணாவிரதம் + "||" + People fast in front of the Tenkasi Municipal Council office

தென்காசி நகரசபை அலுவலகம் முன் பா.ஜனதாவினர் உண்ணாவிரதம்

தென்காசி நகரசபை அலுவலகம் முன் பா.ஜனதாவினர் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகரசபை அலுவலகம் முன்பு பா.ஜனதாவினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
தென்காசி,

தென்காசி நகரசபை அலுவலகத்தில் புதிய வரி விதிப்பு மற்றும் பெயர் மாற்றம் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை மனுதாரர் மூலமாக மட்டும் வாங்க வேண்டும். அவற்றை வரிசைப்படி மட்டும் பரிசீலனைக்கு எடுக்க வேண்டும். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்படி கட்டப்படும் வீடுகளுக்கு அரசாணைப்படி திட்ட அனுமதி வரைபடம் கேட்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகரசபை அலுவலகம் முன்பு பா.ஜனதாவினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களிடம் ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர். இதில் முன்னாள் கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க இயக்குனர் ராஜ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி, இந்து முன்னணி நகர தலைவர் லட்சுமி நாராயணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மாவட்ட எஸ்.சி. அணி செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமாவளவனை கைது செய்யக் கோரி தென்காசியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்; 160 பேர் கைது
தென்காசியில் திருமாவளவனை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 160 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பானது.
2. கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை முழுமையாக திறக்க கோரி காய்கறி வியாபாரிகள் உண்ணாவிரதம்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை முழுமையாக திறக்ககோரி காய்கறி வியாபாரிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி போராட்டம் சித்தி விநாயகர் கோவிலுக்குள் நுழைய முயன்ற பா.ஜனதாவினர் கைது
மும்பையில் சித்தி விநாயகர் கோவிலுக்குள் நுழைய முயன்ற பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்.
4. பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்
தமிழகம்- புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
5. ஊதிய உயர்வு வழங்கக்கோரி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உண்ணாவிரதம்
ஊதிய உயர்வு வழங்கக்கோரி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை