மாவட்ட செய்திகள்

ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகலா? தேவேந்திர பட்னாவிஸ் பதில் + "||" + Can Eknath Katche quit BJP? Devendra Patnavis Answer

ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகலா? தேவேந்திர பட்னாவிஸ் பதில்

ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகலா? தேவேந்திர பட்னாவிஸ் பதில்
ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகப்போவதாக கூறப்படுவதற்கு முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்தார்.
மும்பை,

தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் மந்திரியாக இருந்தவர் பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே. எனினும் ஊழல் புகாரில் சிக்கி 2016-ம் ஆண்டு மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட கூடவாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.


மேலும் பா.ஜனதா மீது அதிருப்தியில் உள்ள அவர் கட்சி மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது நாளை (வியாழக்கிழமை) அவா் தேசியவாத காங்கிரசில் சேர உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தினந்தோறும் பேசுகிறார்கள்

இது குறித்து உஸ்மனாபாத்தில் வெள்ளபாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

அதுபோன்ற நேரம் (கட்சே கட்சி மாறுவது) குறித்து தினந்தோறும் பேச்சுகள் அடிபடுகின்றன. நான் அதுகுறித்து பேசப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏக்நாத் கட்சே சட்டசபை எதிா்க்கட்சி தலைவராக இருந்த போது பா.ஜனதாவை வளர்க்க கடுமையாக உழைத்தவர் என அவருக்கு சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புகழாரம் சூட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓராண்டு நிறைவு: ‘அதிகாலையில் பதவி ஏற்ற நிகழ்வு மறக்கப்பட வேண்டியவை’ தேவேந்திர பட்னாவிஸ் சொல்கிறார்
அதிகாலையில் பதவி ஏற்ற நிகழ்வு மறக்கப்பட வேண்டியவை என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
2. ‘லவ் ஜிகாத்’ சட்டம் மராட்டியத்தில் இயற்றப்படுமா? சஞ்சய் ராவத் பதில்
மராட்டியத்தில் ‘லவ் ஜிகாத்’ சட்டம் எப்போது இயற்றப்படும் என்ற கேள்விக்கு சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் நேற்று பதிலளித்தார்.
3. ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க பாஜக முயற்சி எடுக்க வேண்டும், அதன்பிறகு கராச்சியை பார்க்கலாம்: சிவசேனா
கராச்சி ஒரு நாள் இந்தியாவின் அங்கமாக மாறும் என்று பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறிய கருத்துக்கு சிவசேனா பதிலடி கொடுத்துள்ளது.
4. மின் கட்டண தள்ளுபடி வாக்குறுதியை அரசால் நிறைவேற்ற முடியவில்லை தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
மின் கட்டண தள்ளுபடி வாக்குறுதியை அரசால் நிறைவேற்ற முடியவில்லை என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
5. காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததற்காக சிவசேனா மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்
காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததற்காக சிவசேனா மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.