செங்கோட்டை ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


செங்கோட்டை ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2020 5:03 AM IST (Updated: 21 Oct 2020 5:03 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை ரெயில் நிலையம் முன்பு தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் செங்கோட்டை கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

செங்கோட்டை,

செங்கோட்டை ரெயில் நிலையம் முன்பு தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் செங்கோட்டை கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரெயில்வே தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை உடனடியாக வழங்கிடவும், ரெயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவா் சாபு தலைமை தாங்கினார். செயலாளா் குமாரசாமி முன்னிலை வகித்தார். கோட்டச்செயலாளா் ஜே.எம்.ரபீக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் உதவி கோட்டத்தலைவா் சுப்பையா, உதவி கோட்டச்செயலாளா்கள் சீதாராமன், ஜூலி, நெல்லை கிளைச்செயலாளா் அய்யப்பன், நெல்லை கிளை உதவித்தலைவா் தமிழரசன் ஆகியோர் பேசினா். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனா். செங்கோட்டை கிளை உதவி தலைவா் அகிலன் நன்றி கூறினார்.


Next Story