கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை வளங்களை காக்க வேண்டும் - கண்காணிப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை வளங்களை காக்க வேண்டும் - கண்காணிப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Oct 2020 3:13 PM IST (Updated: 21 Oct 2020 3:13 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை வளங்களை காக்க வேண்டும் என கண்காணிப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, செல்லகுமார் எம்.பி. ஆகியோர் தலைமையில் நடந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் டி.செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி), ஒய்.பிரகாஷ் (தளி), பி.முருகன் (வேப்பனப்பள்ளி), எஸ்.ஏ.சத்யா (ஓசூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், வேளாண்மைத்துறை, வனத்துறை, குடிநீர் வடிகால்வாரியம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் செல்லகுமார் எம்.பி. பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை சூழலையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் வகையில் கனிம வளங்களை ஏலம் விடக்கூடாது. இயற்கை வளங்களை காக்க வேண்டும். மாவட்டத்தில் இருந்து இயற்கை வளங்கள், அண்டை மாநிலங்களுக்கு கடத்துவதை தடுக்கும் அரசு அலுவலர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய அரசின் அனைவருக்கும் வீடு, நகரம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பதிலாக மாற்று நபர்கள் பயன் பெற்றுள்ளது போன்ற குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று பேசினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பெரியசாமி, வன அலுவலர் பிரபு, ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றியக்குழு தலைவர்கள் உஷாராணி, சசி, அம்சாராஜன், சீனிவாசலுரெட்டி, விஜயலட்சுமி, சரோஜினி, கேசவமூர்த்தி மற்றும அனைத்து துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story