பிசில் மாரியம்மன் கோவில் சிலை பிரதிஷ்டை: வேட்டை தடுப்பு காவலர்கள் பாரம்பரிய நடனம் ஆடி கொண்டாட்டம் + "||" + Dedication of Bisil Mariamman Temple Statue: Anti-hunting guards traditional dance Audi celebration
பிசில் மாரியம்மன் கோவில் சிலை பிரதிஷ்டை: வேட்டை தடுப்பு காவலர்கள் பாரம்பரிய நடனம் ஆடி கொண்டாட்டம்
பிசில் மாரியம்மன் கோவிலில் சிலை பிர திஷ்டை செய் யப்பட்டதை தொடர்ந்து அங்கு வேட்டை தடுப்பு காவலர்கள் பாரம்பரிய நடனம் ஆடி தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடினர்.
தாளவாடி,
சத்திமயங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதி அரேப்பாளையத்தில் 100 ஆண்டுகள் பழமையான பிசில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு அரேப்பாளையம், பங்களாதொட்டி, ஒங்கல்வாடி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், யானைகள் நடமாடும் பகுதியில் கோவில் உள்ளதாக கூறி வனத்துறை உயர் அதிகாரிகள் கோவில் சிலையை கடந்த 13-ந் தேதி அகற்றினர். இதற்கு கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து வனத்துறையினர் அகற்றிய சிலையை மீண்டும் கிராமமக்களிடம் ஒப்படைத்தனர்.
நடனம்
இதையடுத்து பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம மக்கள் சாமி சிலைக்கு புனிதநீர் ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்தனர். இதனை கிராம மக்கள் ஆடி, பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். அதே போல் பிசில் மாரியம்மனை குலதெய்வமாக வழிபடும் வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களும், தங்களது பாரம்பரிய நடனம் ஆடி கொண்டாடினார்கள்.
வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள 18 கிராமங்களுக்கு சொந்தமானது நாணப்பரப்பு மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் திருவிழாவையொட்டி கிராமமக்கள் நாணப்பரப்பு மாரியம்மன் கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்தனர்.