மாவட்ட செய்திகள்

மத வன்முறையை தூண்டியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீஸ் + "||" + Actress Kangana Ranaut has been issued a notice by the police to file a case against her for inciting religious violence

மத வன்முறையை தூண்டியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீஸ்

மத வன்முறையை தூண்டியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீஸ்
மத வன்முறையை தூண்டியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து நடிகை கங்கனா ரணாவத் இந்தி திரையுலகம் மீது பல குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார். இதேபோல அவர் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியது, வேளாண் மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பயங்கரவாதிகள் என தெரிவித்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன. இதேபோல நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரன்கோலி ஆகியோர் இரு மதத்தினர் இடையே வன்முறையை தூண்டிவிடும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இது குறித்து மும்பையை சேர்ந்த காஸ்டிங் இயக்குனரான சாகில் அஷ்ரப்அலி செய்யது பாந்திரா மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

வழக்குப்பதிவு

மனுவை விசாரித்த நீதிபதி, மதவாத மோதலை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக பாந்திரா போலீசார் நேற்று தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரன்கோலி ஆகியோர் மீது கோர்ட்டு உத்தரவின் பேரில் இருபிரிவினர் இடையே மத வன்முறையை தூண்டுதல், வேண்டுமென்றே மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இந்தநிலையில் அவர்களிடம் விசாரணை உள்ளோம்.

இதற்காக வருகிற திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை இருவரும் போலீசில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி கலெக்டரை மாற்ற அனுமதி கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை மாற்ற அனுமதி கோரிய தமிழக அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2. ஆர்.எஸ். பாரதியின் மனுவை நிராகரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு
ஆர்.எஸ். பாரதியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
3. வன்கொடுமை வழக்கு: ஆர்.எஸ்.பாரதியின் மேல்முறையீ்ட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி பட்டியல் இனத்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4. ஏற்காடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு: அரசு பெண் ஊழியர் பணி நீக்கம்
ஏற்காடு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்ததால் வேளாண்மைத்துறை பெண் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
5. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வக்கீல் எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-