மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது + "||" + Electricity officer arrested for trying to rape girl near Tiruvallur

திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது

திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது
திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது போக்சோ சட்டம் பாய்ந்தது.
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 54). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உயர் மின் அழுத்த மின்சார கம்பி அமைக்கும் பணியில் சிறப்பு பிரிவு உதவி செயற்பொறியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் தன்னுடைய வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன சிறுமி இது குறித்து தன்னுடைய பெற்றோர்களிடம் கூறி உள்ளார். இது குறித்து அவரது பெற்றோர்கள் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று சுரேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் நவீன அடிமைத்தனம் குற்றங்களுக்காக 6 பேர் கைது
இங்கிலாந்தில் நவீன அடிமைப்படுத்துதல் குற்றங்களுக்காக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. திருச்சி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: முன்னாள் ராணுவ வீரர் கைது
திருச்சி அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
3. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
4. போலி விமான டிக்கெட்: சென்னை விமான நிலையத்தில் புதுப்பெண் கைது
திருமணமான 3-வது வாரத்தில் சார்ஜா செல்லும் கணவரை வழியனுப்ப போலி விமான டிக்கெட்டுடன் சென்னை விமான நிலையம் வந்த புதுப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
5. கரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 115 பேர் கைது
கரூரில் சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 115 பேரை போலீசார் கைது செய்தனர்.