நாளை முதல் சேலம் வழியாக பெங்களூரு-கன்னியாகுமரி உள்பட 6 சிறப்பு ரெயில்கள் இயக்கம்


நாளை முதல் சேலம் வழியாக பெங்களூரு-கன்னியாகுமரி உள்பட 6 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 22 Oct 2020 9:07 PM IST (Updated: 22 Oct 2020 9:07 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு-கன்னியாகுமரி உள்பட 6 சிறப்பு ரெயில்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சேலம் வழியாக இயக்கப்படுகின்றன.

சேலம்,

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக 6 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி மைசூரு-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 30-ந் தேதி வரை தினமும் மாலை 6.20 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர் வழியாக மறுநாள் காலை 11.15 மணிக்கு தூத்துக்குடிக்கு சென்றடையும். வருகிற 24-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 1-ந் தேதி வரை தினமும் மாலை 4.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 9.55 மணிக்கு மைசூருவை சென்றடையும்.

இதேபோல மைசூரு-மயிலாடுதுறை சிறப்பு ரெயில் வருகிற 25-ந் தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதி வரை தினமும் மாலை 4.30 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர் வழியாக மயிலாடுதுறைக்கு சென்றடையும். மறுநாள் காலை 7 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு மைசூருக்கு சென்றடையும். வருகிற 26-ந் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தினமும் மாலை 5.50 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு சேலம் வழியாக அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு மைசூருக்கு சென்றடையும்.

கே.எஸ்.ஆர். பெங்களூரு-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நாளை முதல் அடுத்த மாதம் 30-ந் தேதி வரை தினமும் இரவு 8 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, கோவை, கேரளா மாநிலம் வழியாக மறுநாள் மாலை 5 மணிக்கு கன்னியாகுமரிை-யை சென்றடையும்.

கன்னியாகுமரியில் இருந்து 25-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு இந்த சிறப்பு ரெயில் புறப்பட்டு சேலம் வழியாக அடுத்த நாள் காலை 7.25 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story