மாவட்ட செய்திகள்

வாசுதேவநல்லூர் அருகே, வயலில் உழுதபோது பரிதாபம்: கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பலி + "||" + A farmer dies after falling into a well with a tractor while plowing a field near Vasudevanallur

வாசுதேவநல்லூர் அருகே, வயலில் உழுதபோது பரிதாபம்: கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பலி

வாசுதேவநல்லூர் அருகே, வயலில் உழுதபோது பரிதாபம்: கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பலி
வாசுதேவநல்லூர் அருகே வயலில் உழவு செய்தபோது கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
வாசுதேவநல்லூர், 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தும்பைமேடு முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமபாண்டி (வயது 50). விவசாயியான இவர் பக்கத்து ஊரான ஏமன்பட்டியில் உள்ள செல்லப்பாவுக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது வயலில் உள்ள தரைமட்ட கிணற்றின் அருகில் உழவு செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்தது. சுமார் 65 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் இருந்தது. இதனால் ராமபாண்டி கிணற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வ முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, ராமபாண்டியின் உடலை மீட்டனர்.

பின்னர் அவரது உடலை பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலி; கணவன்-மனைவி படுகாயம்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கார் மோதிய விபத்தில் மற்றொரு கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2. மாமல்லபுரத்தில் மின்சாரம் தாக்கி சிற்பக்கலைஞர் சாவு
மாமல்லபுரத்தில் கல் அறுக்கும் எந்திரத்தின் மூலம் சிற்பம் வடிக்கும்போது மின்சாரம் தாக்கி சிற்பக்கலைஞர் பரிதாபமாக இறந்தார்.
3. சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. மராட்டியத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 376 பேர் பலி
மராட்டியத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 376 பேர் உயிரிழந்தனர்.
5. சென்னை வந்த அரசு பஸ்-லாரி மோதல் டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி 21 பேர் படுகாயம்
சிதம்பரம் அருகே அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியாகினா். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.