வலங்கைமான் அருகே, மோட்டார்சைக்கிள் மீது மொபட் மோதல்; கணவர் பலி -மனைவி படுகாயம்
வலங்கைமான் அருகே மோட்டார்சைக்கிள் மீது மொபட் மோதி கணவர் பரிதாபமாக இறந்தார். மேலும் மனைவி படுகாயம் அடைந்தார்.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஏரிவேளூர் ஊராட்சி சேலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அனிதா (37). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் திருக்கருகாவூரில் இருந்து பாபநாசம் ரோட்டில் மதகரம் என்ற இடத்தில் தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த அழகன் (60) என்பவர் ஓட்டி சென்ற மொபட் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் படுகாயமடைந்த கணவன்-மனைவி இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரசேகரன் பரிதாபமாக இறந்தார். அனிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story