விழுப்புரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பணியிடை பயிற்சி - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


விழுப்புரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பணியிடை பயிற்சி - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Oct 2020 6:09 PM IST (Updated: 23 Oct 2020 6:09 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பணியிடை பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பணியிடை பயிற்சி நேற்று தொடங்கியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சியை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பயிற்சியில் பங்கேற்ற சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், விழுப்புரம் பணியிடை பயிற்சி மைய துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் ஆகியோர் கலந்துகொண்டு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி அளித்தனர். அதாவது வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தும் விதம், விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிக்கை எவ்வாறு தயாரிப்பது, நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தருவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் 40 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். தொடர்ந்து, இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) பயிற்சி நடைபெறுகிறது.


Next Story