புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? மாநில தேர்தல் ஆணையர் பதில்
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் விளக்கம் அளித்தார்.
புதுச்சேரி,
நான் அரசுப்பணியில் 38 ஆண்டுகள் இருந்துள்ளேன். இதுவரை 7 தேர்தல்களை சந்தித்துள்ளேன். தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளேன். உள்ளாட்சி தேர்தல் என்பது ஜனநாயகத்துக்கு அடிப்படையானது.
புதுவையில் பல்வேறு காரணங்களினால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. தற்போது வார்டு மறுவரையறை பணிகள் முடிந்துவிட்டன. அடுத்ததாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கவேண்டும். இதற்காக வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
உறுதியாக கூறமுடியாது
இப்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் காலம் என்பதால் எந்தவகையில் தேர்தலை நடத்தலாம் என்று அரசியல் கட்சியினர், மருத்துவ வல்லுனர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினருடனும் விவாதிக்கப்படும். விரைவில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலைக்கூட முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் பெண்களுக்கு 33 சதவீத வாய்ப்புகள் கிடைக்கும். உள்ளாட்சி தேர்தலை எவ்வளவு காலத்துக்குள் நடத்த முடியும், வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்த முடியுமா? என்பது தொடர்பாக என்னால் இப்போது உறுதியாக கூறமுடியாது. எனது நியமனம் தொடர்பான விமர்சனங்களுக்கு என்னால் இப்போது கருத்து தெரிவிக்க முடியாது.
இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் கூறினார்.
Related Tags :
Next Story