மாவட்ட செய்திகள்

“அ.தி.மு.க.-பா.ம.க. இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி + "||" + “The AIADMK-BJP There is no dispute between ”Minister Kadampur Raju interview

“அ.தி.மு.க.-பா.ம.க. இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

“அ.தி.மு.க.-பா.ம.க. இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
“அ.தி.மு.க.-பா.ம.க. இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
ஏரல், 

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளார். தேர்தலின்போது அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அதனை தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு கூறி வலியுறுத்துவார்கள். அந்த வகையில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசும் இட ஒதுக்கீடு தொடர்பாக கூறி இருக்கிறார். இதற்கும், கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு தேர்தல் ஒப்பந்தத்தின்படி, ராஜ்யசபா எம்.பி. பதவியை அன்புமணி ராமதாசுக்கு வழங்கி உள்ளோம். எங்களுக்குள் எந்தவித சர்ச்சையும் இல்லை. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடும்போது, அதில் இடம் பெறுவது குறித்து தலைமை முடிவு செய்யும். மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவது இயல்பானது. சுனாமி, கஜா புயல் போன்ற பேரிடர் காலத்திலும் தமிழக அரசின் மீட்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. இதனை நடிகர் கமல்ஹாசன் நினைத்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் எட்டயபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

திரையரங்குகள் திறப்பு

நடிகர்கள் சம்பள குறைப்பு செய்வது, அவர்களாகவே முடிவு செய்ய வேண்டிய விஷயம். இதில் அழுத்தம் கொடுக்க முடியாது. அரசு நேரடியாக தலையிட்டு சொல்வதற்கு நல்ல முகாந்திரம் இருக்காது. இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள், நடிகர் சங்கத்தினர் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் திரையரங்குகளை மீண்டும் திறக்கும்போது, அன்றைய சூழ்நிலையை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்ற தகவல் வந்ததும், அதனை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவோம் என்று அறிவித்தது, இந்தியாவிலேயே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். இதனை பொறுத்து கொள்ள முடியாமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது போலீஸ் கமிஷனர் பேட்டி
சென்னையில், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது போலீஸ் கமிஷனர் பேட்டி.
2. நான் காதலில் தோல்வி அடைந்தேன் நடிகை அஞ்சலி பேட்டி
அஞ்சலி நடித்த சைலன்ஸ் படம் ஓ.டி.டி.யில் வெளியானது. தற்போது தமிழில் பூச்சாண்டி படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
3. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
4. “குறுக்கு வழியில் வெற்றி பெற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை” சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பேட்டி
“குறுக்கு வழியில் வெற்றிபெற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை” என்று சைதை துரைசாமியின் குற்றச்சாட்டுக்கு, மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.
5. வருமானவரி சோதனை எந்த சார்பும் இல்லாமல் நடக்கிறது: ‘எடப்பாடி பழனிசாமியை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது’
எடப்பாடி பழனிசாமியை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்று ‘தந்தி' தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமித்ஷா கூறியுள்ளார்.