மாவட்ட செய்திகள்

ஆண்டிமடம் அருகே பரிதாபம்: விவசாய நிலத்தில் மின்வேலியை மிதித்த பெண் சாவு விவசாயி கைது + "||" + Tragedy near Andimadam: Death of a female farmer who stepped on an electric fence on a farm land

ஆண்டிமடம் அருகே பரிதாபம்: விவசாய நிலத்தில் மின்வேலியை மிதித்த பெண் சாவு விவசாயி கைது

ஆண்டிமடம் அருகே பரிதாபம்: விவசாய நிலத்தில் மின்வேலியை மிதித்த பெண் சாவு விவசாயி கைது
ஆண்டிமடம் அருகே விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்த பெண் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிமடம், 

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவரது நிலத்தில் அதே ஊரை சேர்ந்த விவசாயியான வேல்முருகன்(வயது 40) என்பவர் கடந்த 6 மாதங்களாக குத்தகைக்கு பயிர்செய்து வந்துள்ளார். அந்த விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளார். காட்டுப்பகுதி என்பதால் பன்றிகள் அடிக்கடி பயிரை நாசம் செய்து வந்துள்ளது. இதனால் விவசாய நிலத்தை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், அங்கு ஒரு பெண் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது இத்ரிஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து, அந்த பெண் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்து கிடந்தவர் அருகில் மின்சார வேலி அமைத்து இருந்தது தெரியவந்தது.

மின்சாரம் பாய்ந்து...

இதையடுத்து போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர், அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே குளத்தூர் கிராமத்தை சேர்ந்த மோகனின் மனைவி நிர்மலா(வயது 40) என்பதும், இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, பின்னர் சிறிது காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தெரியவந்தது.

கைது

மேலும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நிர்மலா மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாகவும், நேற்று முன்தினம் நடந்தே ஓலையூர் பகுதிக்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக மின்வேலி கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வேல்முருகனை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கும்மிடிப்பூண்டி அருகே ரூ.5 லட்சம் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர் கைது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அடுத்த பண்பாக்கம்-குருதானமேடு சாலையில் சாலமன் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியுடன் கூடிய மோட்டார் பம்ப் செட்டிற்கான குடோன் உள்ளது.
2. சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. திருட்டுத்தனமாக மதுவிற்ற 4 பேர் கைது
திருட்டுத்தனமாக மதுவிற்ற 4 பேர் கைது.
4. தேர்தல் அன்று வாக்காளர்களுக்கு வழங்க வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 2,051 மதுபாட்டில்கள் பறிமுதல் அ.தி.மு.க. கிளை செயலாளர் உள்பட 2 பேர் கைது
தேர்தல் அன்று வாக்காளர்களுக்கு வழங்க வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,051 மதுபாட்டில்களை தேர்தல் கூடுதல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க. கிளைசெயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது விவகாரம்: விசாரணை குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது விவகாரத்தில், போலீசாரின் நடவடிக்கை குறித்த விசாரணை குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.