மாநில மின் நிறுவனத்தில் 8 ஆயிரத்து 500 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் மந்திரி நிதின் ராவத் அறிவிப்பு
மராட்டிய மாநில மின் பகிர்மான நிறுவனத்தில் 8 ஆயிரத்து 500 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என மின்சார துறை மந்திரி நிதின் ராவத் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டிய மின்சார துறை மந்திரி நிதின் ராவத் நேற்று மாநில மின்பகிர்மான நிறுவன (எம்.எஸ்.இ.டி.சி.எல்.) உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிகாரிகள் மின்பகிர்மான நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப மந்திரியை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கூட்டம் முடிந்த பிறகு மாநில மின்பகிர்மான நிறுவனத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பப்படும் என மந்திரி அறிவித்தார்.
1, 762 என்ஜினீயர்கள்
மேலும் மந்திரி நிதின் ராவத் கூறுகையில், “மாநில இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வேலைவாய்ப்பு அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தும்” என்றார்.
மேலும் இதுகுறித்து மாநில மின்பகிர்மான சேர்மன் தினேஷ் வாக்மாரே வெளியிட்டுள்ள தகவலில், காலியாக உள்ள பணியிடங்கள் காரணமாக மின்நிறுவன ஊழியர்கள் அதிக பணிச்சுமையை சந்தித்து வருவதாக தெரிவித்து உள்ளார்.
மாநில மின் பகிர்மான நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களில் 6 ஆயிரத்து 750 பேர் தொழில்நுட்ப பிரிவுக்கும், 1,762 என்ஜினீயர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Related Tags :
Next Story