மாவட்ட செய்திகள்

புதுவையில் இருந்து பெங்களூருக்கு 28-ந் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கம் + "||" + From Puduvai to Bangalore Government buses will be operational from the 28th

புதுவையில் இருந்து பெங்களூருக்கு 28-ந் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கம்

புதுவையில் இருந்து பெங்களூருக்கு 28-ந் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கம்
புதுவையில் இருந்து பெங்களூருக்கு வருகிற 28-ந் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
புதுச்சேரி, 

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து புதுவை மாநிலத்திற்குள் தற்போது அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லை வரை வந்து செல்கின்றன. புதுவையில் இருந்து தமிழகத்திற்கு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அரசு பஸ்கள் இயக்கம்

கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து வருகிற 28-ந் தேதி முதல் புதுவையில் இருந்து பெங்களூருக்கு புதுவை அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்த பஸ் புதுவையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும். அந்த பஸ் பெங்களூருவில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும்.

இந்த பஸ்சில் அரசின் உத்தரவுப் படி சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதால் 33 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கட்டணமாக ரூ.275-ம், முன் பதிவு கட்டணமாக ரூ.25 என மொத்தம் ரூ.300 வசூலிக்கப்படும். இந்த பஸ்சில் பயணம் செய்ய புதுவை பஸ்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையம் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை பி.ஆர்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு 31-ந் தேதி வரை நீட்டிப்பு; காணும் பொங்கல் அன்று கடற்கரைக்கு செல்ல தடை- தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் ஜனவரி 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் நேரக்கட்டுப்பாட்டை தளர்த்தி வழக்கமான நேரங்களில் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2. பூடானில் டிசம்பர் 23 முதல் 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்
பூடான் நாட்டில் டிசம்பர் 23ந்தேதி முதல் அடுத்த 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமலாகிறது.
3. 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு முதுகலை அறிவியல்-தொழில்நுட்ப பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் 8 மாதங்களுக்கு பிறகு முதுகலை அறிவியல்-தொழில்நுட்ப பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது.
4. ஊரடங்கு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக குறைவு
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது
5. மராட்டியத்தில் ஊரடங்கில் தளர்வு உணவகங்கள், பார்கள் திறப்பு
மாநில அரசு அனுமதி அளித்ததை அடுத்து மராட்டியத்தில் நேற்று உணவகங்கள், பார்கள் திறக்கப்பட்டன.