திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு, கிளியனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்து பெண்களை இழிவுபடுத்தும் மனுநூலை தடை செய்யக்கோரி வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
வானூர்,
திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்து பெண்களை இழிவுபடுத்தும் மனுநூலை தடை செய்யக்கோரி வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ் முகிலன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து பெண்களை இழிவுபடுத்தும் மனுநூலை தடை செய்ய வேண்டும் என்றும், திருமாளவனுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநிலத் துணை செயலாளர்கள் பொன்னிவளவன், இளங்கோவன், ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் ஐயாபாலு, மாவட்ட அமைப்பாளர் ராமதாஸ், மகளிர் அணி அமைப்பாளர் மங்கை, மாவட்ட அமைப்பாளர் தமிழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிளியனூரில் மாவட்ட துணை செயலாளர் இரணியன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரிகாலன், இளைஞரணி மாவட்ட செயலாளர் வெற்றி நிலவன், தொகுதி செயலாளர் அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story