மாவட்ட செய்திகள்

2020-2021-ம் ஆண்டிற்கு மின்சாரம் வாங்க ரூ.246 கோடி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் + "||" + Governor Kiranpedi approves Rs 246 crore purchase of electricity for 2020-2021

2020-2021-ம் ஆண்டிற்கு மின்சாரம் வாங்க ரூ.246 கோடி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்

2020-2021-ம் ஆண்டிற்கு மின்சாரம் வாங்க ரூ.246 கோடி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
புதுச்சேரியில் 2020-2021-ம் ஆண்டிற்கு மின்சாரம் கொள்முதல் செய்ய ரூ.246 கோடி செலவுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி, 

புதுச்சேரி அரசிடமிருந்து கடந்த 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 49 கோப்புகள் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பெரும்பாலான கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி ராய் தாமஸ் 3 ஆண்டுகளுக்கு நியமனம், புதுச்சேரி மாநில விளையாட்டு குழுவுக்கு ஊழியர்கள் சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளுக்காக ரூ.1.52 கோடி நிதி ஒதுக்கீடு,

புதுச்சேரி தெற்கு போலீஸ் சூப்பிரண்டாக ஐ.பி.எஸ். அதிகாரி லோகேஷ்வரன் நியமனம், காரைக்கால் நகராட்சிக்கு கழிவுநீர் சுத்தம் செய்வதற்காக ரூ.76.70 லட்சம் ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி செயலாக்க முகமை (பிஐஏ) இணை திட்ட இயக்குனர் ஆஷிஷ் கோயலுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு, தேசிய விளையாட்டுகளில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் பள்ளி குழுக்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவதற்கான வழிமுறைகள் வெளியீடு, புதுச்சேரியில் 2020-2021-ம் ஆண்டிற்கு மின்சார தேவைகளுக்காக பல்வேறு மின்உற்பத்தி நிலையங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததற்காக ரூ.245.77 கோடி செலவு ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. இழப்பீடு

பிப்மேட் ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ.9.15 கோடி நிதி ஒதுக்கீடு, புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாக செலவுக்காக ரூ.13.47 கோடி ஒதுக்கீடு, புதுவை பொறியியல் கல்லூரி ஊழியர் சம்பளத்துக்காக ரூ.17.46 கோடி ஒதுக்கீடு, காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லூரி ஊழியர் சம்பளத்துக்காக ரூ.3.16 கோடி ஒதுக்கீடு,

புதுச்சேரி ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளி ஊழியர் சம்பளத்துக்காக ரூ.34.83 லட்சம் ஒதுக்கீடு, புதுச்சேரி புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை ஊழியர் சம்பளத்துக்காக ரூ.54.70 லட்சம் ஒதுக்கீடு, ஏ.எப்.டி.யில் 676 ஊழியர்களுக்கு பகுதி இழப்பீட்டுக்காக ரூ.6.65 கோடி வழங்குதல், ரூ.742 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்கு பதிலாக மத்திய அரசிடமிருந்து கடன்பெறுவது தொடர்பான கடிதம் உள்ளிட்ட பல கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.

இந்த தகவலை கவர்னரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததற்கு கிரண்பெடியே காரணம்; பிரதமருக்கு, நாராயணசாமி பதில்
புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததற்கு கிரண்பெடியே காரணம் என்று பிரதமருக்கு நாராயணசாமி பதில் தெரிவித்தார்.
2. பள்ளிக்கல்வி, வேளாண் இயக்குனர்களுடன் கிரண்பெடி ஆலோசனை
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை, வேளாண் இயக்குனர்களுடன் கவர்னர் கிரண்பெடி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.
3. அரசு துறைகள் புகார் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
அரசுத் துறைகள் புகார் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. அரசுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் விதிமுறை மீறல் கிரண்பெடி குற்றச்சாட்டு
அரசுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
5. அரசு நிலங்களை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் வழக்குப்பதிவு செய்ய கவர்னர் கிரண்பெடி உத்தரவு
அரசு நிலங்களை ஆக்கிரமித்து கிரிக் கெட் மைதானம் அமைக்கப் பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.