மனுதர்ம நூலை தடை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மனுதர்ம நூலை தடை செய்யக்கோரி தர்மபுரி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனுதர்ம சாஸ்திர நூலை தடை செய்யக்கோரி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி நந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராமன், மாவட்ட நிர்வாகிகள் மின்னல் சக்தி, சக்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாஸ்திர நூலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பென்னாகரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முனுசாமி, மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நல்லம்பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன் கலந்துகொண்டு கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். இதில் நிர்வாகிகள் மணி, ராமன், சீனி, அமரா, முனுசாமி, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மனுதர்ம நூலை தடை செய்யக்கோரி கண்டன கோசங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களை இழிவாக சித்தரிக்கும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story