கடலூரில் மனுதர்ம நூலின் நகலை எரித்து வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம்


கடலூரில் மனுதர்ம நூலின் நகலை எரித்து வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2020 4:19 AM GMT (Updated: 26 Oct 2020 4:19 AM GMT)

தொல்.திருமாவளவன் மீது சென்னையில் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டதை உடனே திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர், 

‘மனுதர்ம’ நூலை தடைசெய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது சென்னையில் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டதை உடனே திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தென்.சிவக்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் த.ஆனந்த், மக்கள் அதிகாரம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் நகர செயலாளர் மு.செந்தில் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் சா.முல்லைவேந்தன், அமைப்பு செயலாளர் திருமார்பன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென மனுதர்ம நகலை தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீயை அணைத்து, அவர்களை சமாதானப்படுத்தினர். இதில் நிர்வாகிகள் பழனிவேல், சக்திவேல், சொக்கு, கிட்டு, முரளி, சுபாஷ், குணசேகரன், ராமச்சந்திரன், கலைஞர், திருமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் சம்பத், சீனுவாசன், மகி, செங்கதிர், தாஸ், ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 150 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story