தேவகோட்டை அருகே கண்டன ஆர்ப்பாட்டம்


தேவகோட்டை அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2020 1:33 AM GMT (Updated: 2020-10-27T07:03:24+05:30)

சிவகங்கை மறை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள சிலாமேகநாடு பங்கு புனித மாற்கு இளையோர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேவகோட்டை, 

சிவகங்கை மறை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள சிலாமேகநாடு பங்கு புனித மாற்கு இளையோர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேசிய புலனாய்வு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த இயேசு சபை குருவானவர் 83 வயது அருட்தந்தை ஸ்டேன் சாமியை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிலாமேகநாடு பங்குத்தந்தை அமல்ராஜ் மற்றும் திருத்தொண்டர் குழந்தை இயேசு, பாபு தலைமை வகித்தனர்.இதில் தமிழ் தேசிய சிந்தனையாளர் அருட்தந்தை அற்புதராஜ் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

Next Story