சட்டசபை இடைத்தேர்தலையொட்டி ஆர்.ஆர்.நகரில் சித்தராமையா பிரசாரம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்
சட்டசபை இடைத்தேர்தலையொட்டி ஆர்.ஆர்.நகரில் சித்தராமையா பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஆர்.ஆர்.நகர் மற்றும் சிரா ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஆர்.ஆர்.நகரில் காங்கிரஸ் வேட்பாளர் குசுமாவை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அவர் திறந்த வாகனத்தில் சுற்றி வந்து ஓட்டு சேகரித்தார்.
அவர் மோகன்குமார்நகர், சவுடேஸ்வரிநகர் கோவில், எச்.எம்.டி.லே-அவுட், யஷ்வந்தபுரம் பகுதியில் உள்ள தொட்ட மசூதி, ரெயில் நிலைய சர்க்கிள், பி.கே.நகர், பம்பாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இந்த பிரசாரத்தின்போது காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது, முன்னாள் மந்திரிகள் ராமலிங்கரெட்டி, கிருஷ்ண பைரேகவுடா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். சிரா தொகுதியில் தொடர் பிரசாரம் செய்து வந்த சித்தராமையா நேற்று ஆர்.ஆர்.நகரில் பிரசாரத்தை தொடங்கினார்.
அடிப்படை பிரச்சினைகள்
சித்தராமையா பேசும்போது, “காங்கிரஸ் வேட்பாளர் குசுமா ரவிக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். அவர் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பார். உங்களின் கஷ்டங்களை நேரில் வந்து கேட்டு நிவர்த்தி செய்வார். அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும்“ என்றார்.
Related Tags :
Next Story