தூத்துக்குடி, உடன்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, உடன்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பேச்சை வேண்டுமென்று திட்டமிட்டு, மக்கள் மத்தியில் அவர் மீது உள்ள நல்ல எண்ணங்களை, மரியாதையை குலைக்கும் நோக்கில் ஒரு காணொலியை சமூகவலைதளங்களில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கினார். மாநில வணிகர் அணி துணை அமைப்பாளர் கார்ட்மேன், மாவட்ட அமைப்பாளர் சுலைமான், தொகுதி செயலாளர் ராம், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் காஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், தொகுதி செயலாளர் வெற்றி வேந்தன், மாநில துணை செயலாளர் தமிழ்குட்டி, மகளிர் அணி தமிழ்செல்வி, டிலைட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி
மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி பரமன்குறிச்சி பஜாரில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி ராவணன், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் உடன்குடி ஒன்றிய அமைப்பாளர் முத்துச்செல்வன், தொழிலாளர் விடுதலை முன்னணி ஒன்றிய அமைப்பாளர் சிவநாதன், சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story