பரசுக்கி நீர்வீழ்ச்சி அருகே காவிரி ஆற்றில் பரிசலில் ஆபத்தான பயணம் - சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
பரசுக்கி நீர்வீழ்ச்சி அருகே காவிரி ஆற்றில், பரிசலில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்கிறார்கள். இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் ரவி, சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொள்ளேகால்,
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல மக்கள் உடனடியாக அனுமதிக்கப்படவில்லை. பின்னர் சுற்றுலா தலங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அதில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் மத்யரங்கநாதசுவாமி கோவில், மாரம்மா கோவில், வெஸ்லி தடுப்பணை பகுதி ஆகியவை சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. ஆனால் இந்த பகுதிகள் அரசால் சுற்றுலா தலங்களாக அறிவிக்கப்படவில்லை. இதனால் அங்கு போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
இருப்பினும் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே அமைந்துள்ள பரசுக்கி நீர்வீழ்ச்சியை காண வரும் சுற்றுலா பயணிகள் இந்த பகுதிகளுக்கு சென்று சுற்றிப்பார்க்கிறார்கள். இந்த பகுதிகள் பரசுக்கி நீர்வீழ்ச்சி அருகே காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளன. அதனால் தினமும் இந்த பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் அவர்கள் வெஸ்லி தடுப்பணை பகுதியில் எந்தவொரு மிதவை பாதுகாப்பு உடைகளும் அணியாமல் பரிசலில் ஆபத்தான முறையில் அபாயம் விளைவிக்கும் வகையில் பயணம் மேற்கொள்கிறார்கள்.
அந்த பகுதியில் பரிசலில் பயணம் மேற்கொள்ள அரசு தடை விதித்து இருந்தது. இருப்பினும் சட்டவிரோதமாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பரிசலில் சுற்றுலா பயணிகளை காவிரி ஆற்றுக்குள் அழைத்துச் சென்று வருகிறார்கள். இதற்காக அவர்கள் சுற்றுலா பயணிகளிடம் இருந்து கணிசமான முறையில் கட்டணமும் வசூலித்துக் கொள்கிறார்கள்.
இதுவொரு ஆபத்தான பயணம் என்று தெரிந்தும் சுற்றுலா பயணிகளும் அதை மேற்கொள்கிறார்கள். இதுபற்றி அறிந்த சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “வெஸ்லி தடுப்பணை பகுதியில் பரிசலில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். அங்கு ஆபத்தான முறையில் பரிசலை இயக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தடையை மீறி பரிசலில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

Related Tags :
Next Story