மாவட்ட செய்திகள்

தடையில்லா சான்றிதழ் வழங்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது + "||" + Engineer arrested for accepting Rs 5,000 bribe from farmer

தடையில்லா சான்றிதழ் வழங்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது

தடையில்லா சான்றிதழ் வழங்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது
அறந்தாங்கி அருகே தடையில்லா சான்றிதழ் வழங்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி, 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடியில் கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் தென்னரசு (வயது 45). இந்தநிலையில், அறந்தாங்கியை சேர்ந்த விவசாயி பிரபாகரன், தனது விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்திருந்தார். அதற்கு கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழ் வாங்கி வரும்படி மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து பிரபாகரன், அந்த அலுவலகத்தை நாடினார்.

என்ஜினீயர் கைது

அப்போது அங்கு பணியில் இருந்த உதவி என்ஜினீயர் தென்னரசு, தடையில்லா சான்றிதழ் வழங்க பரிந்துரைக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் தருமாறு பிரபாகரனிடம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் நாகுடிக்கு சென்று மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து என்ஜினீயர் தென்னரசுவிடம், பிரபாகரன் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று தென்னரசுவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சமாக வாங்கிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். கைதான அவரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் உதவி பொறியாளர் தென்னரசு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் வட்டியில்லாமல் கடன் தருவதாக ரூ.1½ கோடி மோசடி; 4 பேர் கைது
மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் வட்டியில்லாமல் கடன் தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. கல்பாக்கம் அருகே இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது கொலை செய்ததாக 2 பேர் கைது
கல்பாக்கம் அருகே இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது. அவரை கொலை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கு: 3-வது மாடியில் இருந்து குதித்து நிதி நிறுவன அதிபர் தற்கொலை
சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி அளித்த வாக்குமூலத்தின்படி, விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிதி நிறுவன அதிபர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தற்கொலை செய்தார்.
4. வங்கி கணக்கில் இருந்து ரூ.47.60 லட்சம் மோசடி சென்னையில் அதிகாரி உள்பட 2 பேர் கைது
இறந்துபோன வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து நூதனமான முறையில் ரூ.47.60 லட்சம் பணத்தை மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. பெங்களூருவில், கூரியர் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் போதைப்பொருட்கள் சிக்கியது 4 பேர் கைது
பெங்களூருவில் கூரியர் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கியது தொடர்பாக கேரளாவை சேர்ந்த பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.